9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்கோபியில் ஆதரவு கேட்ட தொழிற்சங்கத்தினர்

9-ந் தேதி சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு கோபியில் தொழிற்சங்கத்தினர் ஆதரவு கேட்டனா.
9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்கோபியில் ஆதரவு கேட்ட தொழிற்சங்கத்தினர்
Published on

கடத்தூர்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கல்வி, மருத்துவம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிக தொழிலாளர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 9-ந் தேதி சென்னை எழும்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியும் கோபி பஸ் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்து ஆதரவு திரட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் சங்க துணை அமைப்பாளரும், தொ.மு.ச. நகர தலைவருமான முனுசாமி தலைமை தாங்கினார். கோபி பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பயணிகள் ஆகியோரிடம் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டு ஆதரவு கேட்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com