பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி

கடலூரில் பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது.
பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி
Published on

கடலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவுபடி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக எவ்வாறு மீட்டு வருவது என்பது குறித்தும், தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது பற்றியும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமுகம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com