தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளராக கிருத்திகா தேவி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தாம்பரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக எஸ்.ஆர்.ராஜா என்பவர் செயல்பட்டு வருகிறார். அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்.இன்று சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம்பரம் தொகுதியை 3 முறை வென்ற சிட்டிங் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவுக்கு சீட் வழங்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com