ரூ.18.64 கோடி மதிப்பிலான முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

2-ம் தளத்தில் குளிரூட்டப்பட்ட திருமணக்கூடம் மற்றும் விருந்தினர் தங்கும் அறை, மூன்றாம் தளத்தில் விருந்தினர் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.18.64 கோடி மதிப்பிலான முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த 9.3.2024 அன்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை, ஆலந்தூர் "முதல்வர் திருமண மாளிகை"யானது 21,245 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், முதல் தளத்தில் உணவுக்கூடம், இரண்டாம் தளத்தில் குளிரூட்டப்பட்ட திருமணக்கூடம் மற்றும் விருந்தினர் தங்கும் அறை, மூன்றாம் தளத்தில் விருந்தினர் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 2 எண்ணிக்கையிலான மின்தூக்கி வசதிகள், 620 இருக்கை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம், ஒரே சமயத்தில் 240 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடம், 40 எண்ணிக்கையிலான 4 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், 80 எண்ணிக்கையிலான 2 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், சமையலறை கூடம், ஆண்/பெண் இருபாலருக்கும் நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் மணமகன்/மணமகள் இருபாலருக்கும் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளன.

Also Read
சிங்கப்பூரில் இருந்து உ.பி.க்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு: யோகி ஆதித்யநாத்

ரூ.18.64 கோடி மதிப்பிலான முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்த திருமண மண்டபத்தில் 2 எண்ணிக்கையிலான 45 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சேமிப்பிற்கான குடிநீர் தொட்டிகள், 37 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தீயணைப்பிற்காக மேல்நிலை தீயணைப்பு நீர்த்தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் பொது உபயோகத்திற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, சென்னை மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்/முதன்மை செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அப்தாப் ரசூல், இ.ஆ.ப., ஆலந்தூர் மண்டல குழுத்தலைவர் என்.சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com