தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

சென்னை,

கொரோனா பாதிப்பு காரணமாக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழுக்கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com