

சென்னை,
தமிழக வெற்றி கழக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இது சம்பந்தமாக தமிழக வெற்றிக்கழகப் பெண் தொண்டர்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்தனர் இந்த பெண்கள் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.இவரது கருத்து பெண்களை இழிவாக விமர்சித்ததாக கூறி, போலீசில் அமைச்சர் நிர்மல் குமார் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் பொன்ராஜ் மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது பொன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என். ஆர்.இளங்கோ, "புகார்தாரர் நிர்மல் குமார் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் இழிவு படுத்தும் வகையில் மனுதாரர் பேசவில்லை" என்று வாதிட்டார். போலீஸ் தரப்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களின் கேட்டு நீதிபதி, மனு மீதான விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதுவரை மனுதாரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது"என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்