தேவர் ஜெயந்தி விழா: நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை...!

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தேவர் ஜெயந்தி விழா: நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை...!
Published on

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com