வளர்ச்சி திட்டப்பணிகள்

திருவையாறு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தது.
வளர்ச்சி திட்டப்பணிகள்
Published on

திருவையாறு ஒன்றியம் கல்யாணபுரம் ஊராட்சியில் ரூ.1 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதன்படி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளையும், ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு பள்ளி கட்டிடங்களையும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்து, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, உதவி பொறியாளர்கள் விஜயகுமார், தமிழ், பணிமேற்பார்வையாளர் வனிதா, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com