

கோவை,
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி உள்ள 7வது மலையில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
மலையில் உள்ள சிவலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டின் கூறிப்பிட்ட மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டியில் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி 7வது மலையில் உள்ள சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். கடினமான மலைகளில் ஏறும்போது சில பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளியங்கிரி 7வது மலையில் பக்தர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பக்தரின் உடலை கீழே கொண்டு வரும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த பக்தர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.