மோட்டார்சைக்கிள் மோதி வடமாநில பக்தர் பலி

மோட்டார்சைக்கிள் மோதி வடமாநில பக்தர் பலியானார்.
மோட்டார்சைக்கிள் மோதி வடமாநில பக்தர் பலி
Published on

ராமேசுவரம், 

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிரேம்பாபுசர்மா (வயது 68) என்பவர் தனது மனைவி, உறவினர்களுடன் வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திட்டக்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரேம்பாபுசர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த ராமேசுவரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வேலை பார்த்து வந்த வட மாநில வாலிபர் விசுவா(23) படுகாயம் அடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com