இனி தினந்தோறும் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் செல்லலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இனி தினந்தோறும் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பக்தர்கள் சிலர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இனி சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் செல்லலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை சோதனை சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர் என்றும், மாலை 4 மணிக்குள் பக்தர்கள் திரும்ப வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய அனுமதியின்றி மலையில் தங்கியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com