திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்கி தரிசனம் செய்ய வேண்டாம் - மாவட்ட நிர்வாகம்

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்கி தரிசனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்கி தரிசனம் செய்ய வேண்டாம் - மாவட்ட நிர்வாகம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற்கரையில் இரவு தங்கி, முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.

இதனால் பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இன்று பவுர்ணமி தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால், திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்கி தரிசனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com