திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி
Published on: 

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பிரகாரத்திற்குள் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்

தென்னிந்தியாவின் தென் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் (14.10.2026) தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் கனமழை

இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருச்செந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி

திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தேங்கிய மழைநீரால் அங்கு வந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பிரகாரத்திற்குள் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com