திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினத்தையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் மேல் திருத்தணி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா என்பதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காத்திருந்து தரிசனம்

இதனால், பொதுவழியில் பக்தர்கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மேலும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com