மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

பரமத்தி பேரூராட்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி பேரூராட்சியில் தேசிய குடற்புழு நீக்க நாள் மாத்திரைகள் வழங்கும் விழா பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ் பாபு, கவுன்சிலர் நாச்சிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் பூச்சியியல் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மேகலா மாணவர்களுக்கு தன் சுத்தம் குறித்து பேசினார். மேலும் பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 14 ஆயிரத்து 112 மாணவ, மாணவிகளுக்கும், அங்கன்வாடியில் 3 ஆயிரத்து 561 குழந்தைகளுக்கும், மொத்தம் 17 ஆயிரத்து 673 மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார். பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுதமதி கைகளை கழுவும் முறைகளை பற்றி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், ராஜ்குமார், பெரியசாமி, அருண், தனபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com