தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதா? - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதா? - தமிழக அரசு விளக்கம்
Published on: 

சென்னை,

தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குற்றச்சாட்டு

தமிழ்நாடுக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு விளக்கம் அளித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கான தகவல் நம்பகத் தன்மை பிரிவு வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

'ஹூன்டாய்' நிறுவனத்தின் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தி சார்ந்த சப்ளையர் நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 'சியோன் இ-ஹவா' மற்றும் 'வாஷின்' போன்ற கொரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஹூன்டாய் நிறுவனத்திற்கு சப்ளை செய்துவருகின்றன.

முதலீடுகளை விரிவுபடுத்தி...

ஆந்திராவில் 'கியா' நிறுவனம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, 'சியோன் இ-ஹவா' நிறுவனம் 2017-ம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது. தற்போது 'கியா' நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு சில ‘சப்ளையர் நிறுவனங்கள், ஆந்திராவில் தங்களது உற்பத்தியை விரிவுபடுத்தி வருகின்றன.

ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள 'ஹூன்டாய்' நிறுவனத்தின் சப் ளையர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதலீடுகளை விரிவுபடுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள 'ஹூன் டாய்' நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் உயர்தர வாகன மின்னணுவியல் உற்பத்தியிலும் தங்களை விரிவுப்படுத்தி வருகின்றன.

விரைவில் ஆலோசனை...

இத்தகைய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் உதிரிபாக உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்களை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கு உதாரணமாக, மற்றொரு கொரிய நிறுவனமான 'இன்சி கன்ட்ரோல்ஸ்', தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு மையத்தை புனேவில் அமைப்பதற்கு பதிலாக சென் னையை தேர்வு செய்துள்ளது. அடுத்தகட்டமாக 'ஹூன்டாய்' நிறுவனம் மற்றும் அதன் சப்ளையர் நிறுவனங்களுக்கான முதலீடு திட்டங்களை அறிவதற்கும், தேவையான உதவிகளை புரிவதற்கும், விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X