ஏரியில் மூழ்கி வடமாநில டிரைவர் சாவு

ஏரியில் மூழ்கி வடமாநில டிரைவர் சாவு
Published on

ஓசூர்:

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் மகாதோ (வயது 37). இவர் ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள பெத்த எலசகிரி ஏரியில் குளிக்க சென்றார். அங்கு எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com