ஓசூரில்கால்வாயில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

ஓசூரில்கால்வாயில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி
Published on

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பேடரஅளளி அருகே ஆலமரத்துப்பட்டி காசிகாரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மாதையன் ஓசூர் அருகே ஏ.சாமனப்பள்ளி பகுதியில் உள்ள கால்வாயை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் அவர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து பலியானார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com