தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலி

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலி
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலி
Published on

நாமக்கல்லில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முட்டை நிறுவன ஊழியர் பலியானார்.

முட்டை நிறுவன ஊழியர்

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் சங்கர் (வயது 29). இவர் தனியார் முட்டை நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

விசாரணை

அப்போது செல்லப்பம்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com