ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு

ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி ரயில்வே நிலையம் வேப்பாடி ஆற்றுப்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து சென்னை நோக்கி பழனி எக்ஸ்பிரஸ் சென்றது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின்பேரில் சேலம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com