ஏரியில் மூழ்கி முதியவர் சாவு

ஏரியில் மூழ்கி முதியவர் சாவு
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா ஏணிபெண்டா அருகே உள்ள ஏரியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com