கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
Published on

குருபரப்பள்ளி:

காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குருபரப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் முகம், கை, கால் கழுவுவதற்காக தண்ணீர் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் தவறி விழுந்து தண்ணிரீல் மூழ்கி இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com