திண்டுக்கல்: கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது

1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்: கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிலுக்குவார்பட்டி தெற்கு தெரு பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்த தாய் பாண்டியம்மாள்(50), மகள்கள் மல்லிகா(31), பிரியா(27) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com