திண்டுக்கல்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

திண்டுக்கல்லில் இன்று காலை திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
Published on

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இரு வழிச்சாலை பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பணம் வசூலிப்பதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த பெயர் பலகை, கவுண்டர்களை அடித்து நொறுக்கினர். இதனை தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com