திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையம், திசையன்விளையில் மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். வெல்டர் பிரிவிற்கு 8ம் வகுப்பிலும், மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம், மரைன் பிட்டர், வெஷல் நேவிகேட்டர் போன்ற பிரிவுகளுக்கு 10ம் வகுப்பிலும் தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ெமாபைல் எண், இமெயில் ஐடி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகம், தெற்கு இடையன்குடியில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, பஸ்பாஸ் மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மகளிருக்கு வயது வரம்பு 14 மற்றும் உச்சவரம்பு இல்லை மற்றும் ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை விருப்பமுடையவர்கள் ஊராட்சிமன்ற அலுவலகம், தெற்கு இடையன்குடியில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 8838473273, 9443462242 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






