தியாகதுருகம் அருகே பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தியாகதுருகம் அருகே பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தியாகதுருகம் அருகே பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே நாகலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பில் தேசிய பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வருவாய் ஆய்வாளர் பாலு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையிலான படையினர் கலந்து கொண்டு நிலநடுக்கம் மற்றும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், ரூபா தேவி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com