கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

சிவகாசி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
Published on

சிவகாசி, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்தநிலையில் சிவகாசி ஒன்றியம் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் தொடர்ந்து மற்ற பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என்று பஞ்சாயத்து செயலர் நாகராஜன் தெரிவித்தார்.

பஜார் பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் கூட வாய்ப்பு இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மார்க்கெட் பகுதியிலும் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி நோய் பரவலை தடுக்க வேண்டும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com