

சென்னை,
கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜைப் பொருள்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். பூஜைப் பொருள்களின் விலைப் பட்டியலை பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது. மஞ்சள் துணிப் பையை மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும். பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்கச் சொல்லி கடைக்காரர்கள் வற்புறுத்தக்கூடாது
கோவிலுக்கு வெளியே வழித்தடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பூஜைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. கடைகள் சுற்றியும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.