வீட்டு வாசலில் எச்சில் துப்பி சகோதரர்கள் தகராறு; தள்ளி விட்டதில் முதியவர் மரணம்

வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரர்களான சதீஷ், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டு வாசலில் எச்சில் துப்பி சகோதரர்கள் தகராறு; தள்ளி விட்டதில் முதியவர் மரணம்
Published on: 

ஓட்டேரி

சென்னை ஓட்டேரியில் வீட்டு வாசலில் எச்சில் துப்பிய தகராறில், கீழே தள்ளி விட்டதில் முதியவர் மரணம் அடைந்து உள்ளார்.

சென்னை ஓட்டேரி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 69). வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் கீழ் தளத்தில் சகோதரர்களான சதீஷ் (வயது 27), சந்தோஷ் (வயது 25) ஆகியோர் வசித்து வந்தனர். பொன்னுரங்கத்தின் மருமகள் வீட்டு வாசலை சுத்தம் செய்தபோது, சதீஷ், சந்தோஷ் ஆகியோர் எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது.

மது போதை

இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த சகோதரர்கள் இருவரும், பொன்னுரங்கத்தின் மகன் கந்தனிடம் இதுதொடர்பாக மீண்டும் தகராறு செய்தனர். இதனை பொன்னுரங்கம் தட்டிக்கேட்டபோது, சகோதரர்கள் இருவரும் அவரை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

இதில், இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பொன்னுரங்கம் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பொன்னுரங்கம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கொலையாகாத மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து, சகோதரர்களான சதீஷ், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com