பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு: வாலிபர் அடித்துக்கொலை

செங்குன்றம் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொன்ற நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு: வாலிபர் அடித்துக்கொலை
Published on

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அலமாதி கிருஷ்ணா நகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் மாரி(வயது 21). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

நேற்று இவருக்கு பிறந்த நாள். இதனால் நேற்று இரவு கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு மைதானத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாரியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த மாரியை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மாரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சோழவரம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com