

சென்னை,
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்தியா (19 வயது). இவரது கணவர் விக்னேஷ் என்ற வீலிங் விக்கி. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. அதே பகுதியில் குடியிருக்கும் அபினேசின் மனைவி ரம்யா. இவர் 'இன்ஸ்டாகிராமில்' பதிவிட்ட வீடியோவுக்கு விக்னேஷ் 'லைக்' போட்டுள்ளார்.
இதனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு ரம்யா, அவரது கணவர் அபினேஷ் (20 வயது) மற்றும் அவரது உறவினர்கள் விக்னேஷ் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பினரும் படுகாயம் அடைந்தனர்.
விக்னேஷ் தரப்பினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், ரம்யா தரப்பினர் பெரியார்நகர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினேஷ் மற்றும் அவரது உறவினர்களான நாகராஜ் (35 வயது), சுரேஷ் என்ற அப்துல் ரகுமான் (42 வயது) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.