காய்ச்சலை தடுக்க கபசுர குடிநீர் வினியோகம்

காய்ச்சலை தடுக்க கபசுர குடிநீர் வினியோகம்
காய்ச்சலை தடுக்க கபசுர குடிநீர் வினியோகம்
Published on

வால்பாறை

வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் ஓரளவிற்கு மழை பெய்தது. அதன்பின்னர் மழை குறைந்து விட்டது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் 2-வது வாரத்தில் கனமழை பெய்தது. அதன்பின்னர் தென்மேற்கு பருவமழை குறைய தொடங்கியது. கடந்த 2 வாரமாக கனமழை பெய்யாமல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

மேலும் பகலில் கடுமையான வெயிலும் வாட்டி வருகிறது. இந்த மழையும், வெயிலும் கலந்த மாறுபட்ட காலநிலையால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம், நகராட்சி அலுவலக வளாகம், பயணிகள் நிழற்குடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com