கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது மாவட்ட ஆட்சியர் புகார் எனத் தகவல்

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது மாவட்ட ஆட்சியர் புகார் எனத் தகவல்
Published on: 

சென்னை,

ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக கள்ளகுறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாச குறுஞ்செய்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர் புகார்

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக 'தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்' (Tamil Nadu Prohibition of Harassment of Women Act) கீழ், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது போலீசார் புகாரைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது குறித்து மூத்த காவல் அதிகாரிகள் யாரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் விசாரணை

மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசு தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளில் பிற்பகலில் அவர் நேரடியாகப் புகார் அளித்திருப்பதாக கூறப்படுவது வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

X