வட்டார சுகாதார பேரவை கூட்டம்

மாதனூரில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
வட்டார சுகாதார பேரவை கூட்டம்
Published on

மாதனூர் சமுதாய சுகாதார நிலையம் சார்பில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தாரனேஷ்வரி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் சுகாதார பணிகள் அலுவலக உதவி திட்ட மேலாளர் முரளி மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சசிகலாசாந்தகுமார் ஆகியேர் கலந்து கெண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் புதிய துணை சுகாதார நிலையம், டாக்டர்கள் நியமனம். அரங்கல்துருகத்தில் 30 படுக்கைகள் கெண்ட 24 மணி நேர மருத்துவமனை, சாலை மற்றும் கழிப்பிட வசதிகள், குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தெட்டி பேன்ற அடிப்படை வசதிகள் தேவை குறித்து தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், சுவிதா கணேஷ், ரேவதி குபேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com