16-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேமுதிக அறிவிப்பு

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற 16-ம் தேதிமாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 16.09.2026 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

அன்று கட்சியின் 22-ம் ஆண்டு துவக்க நாள் மற்றும் வர இருக்கும் இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோனைகள் நடக்க இருப்பதால், அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த ஆலோனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com