

சென்னை,
அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என்று முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...!
நம் இந்தியா பண்டிகைகளின் நாடு. பண்டிகைகள், கொண்டாட்டங்கள் இல்லாத மாதங்களே இல்லை. சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என தமிழ் மாதங்களின் பெயர்களிலேயே பண்டிகைகளை கொண்டாடுவது நம் கலாசாரம்.
எத்தனை பண்டிகைகளை கொண்டாடினாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. கொண்டாடும் முறையில், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும், தீபாவளியின் தத்துவம் ஒன்றுதான். 'எவ்வளவுதான் அதர்மம் தலை தூக்கினாலும், இறுதியில் தர்மமே வெல்லும்', அதாவது 'அறம் காக்க, அறம் நம்மை காக்கும்' என்பது தான் தீபாவளியின் தத்துவம்.
அதர்மம் அழிந்து தர்மம் வென்ற நாளே தீபாவளி. அதனால்தான், புத்தாடைகள் இனிப்புகள், பட்டாசுகள், விதவிதமான உணவு வகைகள் என்று 24 மணி நேரமும் தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறோம். மேற்காசிய போர், ரஷிய - உக்ரைன் போரால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியால் உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கின்றன. ஆனால், 140 கோடிக்கும் அதிகமான மக்களை கொண்ட இந்தியாவில் நிலையான பொருளாதார வலிமையுடன் திகழ்கிறது. இதற்கு பிரதமர்நரேந்திர மோடியின் நல்லாட்சியே காரணம்.
தேர்தல் மூலம், மக்களை சந்தித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்ட, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான் பூச்சிகள், போராட்டம் என்ற பெயரில் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தன. தொடக்கத்தில் அவர்களுக்கு (அதர்ம சக்திகளுக்கு) வெற்றி கிடைப்பது போல தோன்றினாலும், இறுதியில், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போல இந்தியாலை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால், தீபாவளியின் தத்துவம் போல இறுதியில் தர்மமே வென்றுள்ளது. கரப்பான் பூச்சிகள், மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு தீபாவளி இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த தீபாவளி நன்நாளில் அனைவருக்கும், எல்லா வளங்களும், நலங்களும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.