தீபாவளி பண்டிகை: 250 கண்காணிப்பு கருவிகள் உதவியுடன் தி. நகர் சாலைகள் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் 250 கண்காணிப்பு கருவிகள் உதவியுடன் சாலைகள் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகை: 250 கண்காணிப்பு கருவிகள் உதவியுடன் தி. நகர் சாலைகள் கண்காணிப்பு
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. எனவே பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வணிக பகுதியான தியாகராயநகரில் புத்தாடைகள், நகைகள் உள்பட பொருட்களை வாங்குவதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவது வழக்கம்.

இந்நிலையில் கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக தியாகராயநகரில் ஏராளமான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தியாகராய நகரில் 250 கண்காணிப்பு கருவிகள் உதவியுடன் சாலைகள் கண்காணிக்கப்படும். இதற்கான சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்பாட்டினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

தி. நகர் சாலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 3 காவல் உதவி மையங்கள், 5 கண்காணிப்பு கோபுரங்கள் செயல்பட உள்ளன. குற்றங்களை தடுக்க சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com