தீபாவளி பலகாரம்: வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை வாடிக்கையாளர்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பலகாரம்: வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டம் முழுவதும் இனிப்பு, கார பலகாரங்கள் தயாரிக்கும் வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் பதிவு

இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் எஸ். மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

1) மாவட்டத்தில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் அனைத்து உணவு வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் கட்டாயம் உரிய உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பலகாரக் கூடங்கள். திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் ஆர்டரின் பேரில் பலகாரம் தயாரிப்பவர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்றே விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சான்றிதழ் நுகர்வோரின் பார்வையில் தெளிவாகத் தெரியும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் தவறும் பட்சத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதாரமான சூழல்

3) விற்பனை செய்யப்படும் இனிப்புப் பெட்டிகள் மற்றும் பொட்டலங்களில் பலகாரம் தயாரிக்கப்பட்ட தேதி காலாவதியாகும் காலம். தயாரிப்பாளரின் முகவரி உணவுப் பாதுகாப்புத் துறை பதிவு எண், சைவ/அசைவ குறியீடு உள்ளிட்ட விவரகள் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

4) சில்லறை விற்பனைக் கடைகளில் காட்சிப்படுத்தப்படும் தட்டுகளிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை வாடிக்கையாளர்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்க வேண்டும்.

5) ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித்தொற்று இல்வாத சுகாதாரமான சூழவில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

காலாவதி காலம்

6) அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை மட்டுமே அளவோடு பயன்படுத்த வேண்டும். கவர்ச்சிக்காக அதிகப்படியான வண்ணங்களைச் சேர்க்கக் கூடாது.

7)வகை சார்ந்த ஊர முனுக்கு ரியன் பக்கோடா. தட்டு முறுக்கு சீடை Carmolsina, Erythroscene, Fast Green Metanil Yellow, Orange RN, Rhodamine B. Tartrazine செயற்கை வண்ணங்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட கவரி நிறமிகள் 100 ppm வரை உபயோகப்படுத்தலாம்.

8) இனிப்பு வகைகளைச் சார்ந்த குலாப் ஜாமுன்ரசசமார்பில் மற்றும் ஜிலேபி மைசூர்பாக் சோன்பப்டி மால்பூ GumpupOrange RNLMetanil Yellow, Rhodamine -போன்றை அனுமதிக்கப்படாத செயற்கை கண்ணங்கள் ஆகும்.அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள் 100 ppm வரை உபயோகப்படுத்தவாம்.

9) பரிசுப் பெட்டிகளில் ( Gift Box) பாலால் செய்யப்பட்ட இனிப்புகளைக் குறைந்த காலாவதி காலத்தைக் (குறைந்தபட்சம் 3-5 நாட்கள்) கொண்டிருப்பதால். பிற இனிப்புகளுடன் சேர்த்து பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது.

10) பலகாரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விவரங்களைத் தகவல் பலகையாகக் கடைகளில் வைக்க வேண்டும்.

மருத்துவத் தகுதிச் சான்றிதழ்

11) எண்ணெய் கொதிநிலையில் இருக்கும்போது அதனுடன் புதிய சமையல் எண்ணெய்யைக் கலக்கக் கூடாது.

12) ஒருமுறை பயன்படுத்திய மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது அத்தகைய எண்ணெயை பயோ-மசலாக மாற்றும் அரசின் ரூகோ' (RUCO)திட்டத்தின் கீழ் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்து அந்நிறுவனங்களிடமிருந்து உரிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்

13) சமையலுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதற்க தரப் பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

14) உணவு தயாரிப்பு மற்றும் கையாளும் பணிகளில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் கையுறைகள் தலைக்கவசம் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

15) மேலும் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

முறையான ரசீது

16) பொதுமக்கள் பண்டிகைக் காலப் பலகாரங்களை வாங்கும்போது பாதுகாப்புத் துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

17) திறந்த நிலையில் ஈக்கள் மொய்க்கும் நிலையில் உள்ள பலகாரங்களையும் அளவுக்கு அதிகமான ரசாயன நிறங்கள் கொண்ட பலகாரங்களையும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

18) வாங்கும் பொருட்களுக்கு உணவுவணிகர்களிடமிருந்து முறையான ரசீது பெற வேண்டும்

19) பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் லேபிள் விவரங்கள் முழுமையாகவும் சரியாகவும் உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

உணவுப் பொருட்களின் தரம் குறித்த புகார்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண் 94440 42322ன்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் foodsafety.tn.gov.in என்ற இணையதளம் அல்லது TN Food Safety Consumer App செயலி மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்யலாம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X