

சென்னை,
நுகர்வோருக்கு அன்றாடத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒருங்கிணைந்த "சிறப்பு மளிகைத் தொகுப்பு" ரூ.200 என்ற விலையில்,
மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்க கூட்டுறவு பண்டகசா லைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற் பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை சென்னை செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் அமைந்துள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மருதம் கூட்டுறவு சிறப்பங்காடி (சுய சேவை பிரிவு) விற்பனை நிலையத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார்.
இத்தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் மற்றும் அவற்றின் அளவு விவரம் வருமாறு:-
கடலைப் பருப்பு 250 கிராம், புளி 250 கிராம், பாசிப் பருப்பு 250 கிராம், கடுகு 100 கிராம், மிளகாய் 100 கிராம், உடைத்த உளுத்தம் பருப்பு 100 கிராம், தனியா 150 கிராம், சீரகம் 50 கிராம், பூண்டு 150 கிராம், சோம்பு 50 கிராம் என மொத்த எடை1,450 கிராம் கொண்ட 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.