காவிரி விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொய்ப் பிரசாரம் செய்கிறார் - துரை வைகோ குற்றச்சாட்டு

நீர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டுமென துரை வைகோ கூறியுள்ளார்.
துரை வைகோ
Published on: 

கோவை

மதிமுக முதன்மை செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

பொய்யான தகவல்

”காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தெளிவாக உள்ள நிலையில், அந்தத் தீர்ப்பைத் திரித்துப் பேசி கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே கர்நாடக முதல் மந்திரி இவ்வாறு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை தமிழக பாஜக தலைவர்களும் கேள்வி எழுப்ப வேண்டும்.

தீர்வு காண வேண்டும்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இரு மாநிலங்களுக்கிடையிலான நீர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும். நீர் மேலாண்மை அமைப்பு வழங்கிய அறிவுறுத்தல்களைக்கூட கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை. மேலும், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு. அதிகாரிகளாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X