

டெல்லி,
திமுகவுக்கு லாட்டரி நிறுவனம் ரூ. 125 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன. இந்த நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பல நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், 2025-26ம் நிதியாண்டில் திமுகவுக்கு லாட்டரி நிறுவனம் 125 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட டைகர் அசோசியேட்ஸ் என்ற லாட்டரி நிறுவன திமுகவுக்கு ரூ. 125 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைநவர் சுபயன் நாகராஜன் ஆவார். இவர் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் (லாட்டரி மார்ட்டின்) நெருங்கிய கூட்டாளி ஆவார். மார்ட்டினும், நாகராஜனும் மற்றொரு நிறுவனத்தில் கூட்டாளிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
திமுகவை போன்று அதிமுகவும் டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனத்திடமிருந்து 2025-26ம் நிதியாண்டில் ரூ. 135 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதன் மூலம் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஒரே லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ. 260 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
2025-26ம் நிதியாண்டில் திமுக ஒட்டுமொத்தமாக 191 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. இதே நிதியாண்டில் அதிமுக ஒட்டுமொத்தமாக 161 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.
2024-25ம் நிதியாண்டில் திமுக ஒட்டுமொத்தமாக 365 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற நிலையில் 2025-26ம் நிதியாண்டில் அந்த நன்கொடை 191 கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.