தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

கடையநல்லூர் நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பெட்டி முருகையா, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான செல்லத்துரை சிறப்புரையாற்றினார். வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வருகிற 8-ந் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து கடையநல்லூர் வழியாக ராஜபாளையம் செல்கிறார். அவ்வாறு செல்லும் வழியில் கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com