

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
இதனிடையே தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ, மஜக (மனிதநேய ஜனநாயக கட்சி), முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 3 கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளன.