தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை: பெ.சண்முகம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூன்று மாதம் கூட தாங்காது சொல்வது தவறு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
பெ.சண்முகம்
Published on

சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை. இந்தியா கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் திமுக நிலை குறித்து விரைவில் தெரியும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு மூன்று மாதத்தில் கவிழும் என்று சொல்வது ஏற்க முடியாது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் கூறினாலும் தவறு. பெரும்பான்மை இல்லாததால்தான் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். யாருடனும் ஒப்புதல் கேட்டுவிட்டு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக ஆட்சி மூன்று மாதம் கூட தாங்குமா? என்று தெரியவில்லை என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இன்றைக்கு தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிற ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை பற்றி எல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் சொன்னேன். 6 மாதத்துக்கு எந்த பிரச்சினை பற்றி பேசப் போவதில்லை.

ஆனால் 6 மாதத்துக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம்தான் வந்து கொண்டிருக்கிறது, வந்து விட்டது. அதை பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக் கிறது. 6 மாதம் அல்ல, 5 மாதம் அல்ல. 4 மாதம் அல்ல, 3 மாதமாவது தாங்குமா? என்ற கேள்விக் குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டி ருக்கிறது. இந்த நிலையில் தான் இன்றைக்கு நீங்களும் வந்து இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com