சற்று நேரத்தில் வெளியாகும் திமுக கூட்டணியின் தொகுதி பட்டியல் - பரபரப்பு தகவல்

164 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது.
சற்று நேரத்தில் வெளியாகும் திமுக கூட்டணியின் தொகுதி பட்டியல் -  பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விடுதலை சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்டு 5, மார்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 164 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது.

இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கிடப்பட்ட நிலையில் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் 22 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன. ஆனால், 5 தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எந்த தொகுதிகளில் (70) போட்டியிட உள்ளன என்ற பட்டியல் சற்றுநேரத்தில் வெளியாக உள்ளது. திமுக களமிறங்கும் 164 தொகுதிகளின் பட்டியலும் வெளியாக உள்ளது.

திமுக தொகுதி பட்டியலுடன் சேர்த்து 164 தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக வேட்பாளர் பட்டியலும் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com