தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரம் வெளியீடு

தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரம் வெளியீடு
Published on

சென்னை,

தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரத்தை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் கரூரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான

பெரியார் விருது - கழக துணைப் பொதுச்செயலாளரும் கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும்

அண்ணா விருது - தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் -பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான  சுப.சீத்தாராமன் அவர்களுக்கும்

கலைஞர் விருது - நூற்றாண்டு கண்டவரும் - அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன் அவர்களுக்கும்

பாவேந்தர் விருது - கழக மூத்த முன்னோடியும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் - குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன் அவர்களுக்கும்

பேராசிரியர் விருது - கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் -காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் ராமலிங்கம் அவர்களுக்கும்

மு.க.ஸ்டாலின் விருது - ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com