கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

தனித்து நின்றாலும் திமுகவுக்கு தனிப்பெரும் பலம் உள்ளது என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
Published on

சென்னை,

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் தற்போது இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது;

“கம்யூனிஸ்ட் தோழர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பலமுறை நட்புடன் இருந்து, பிரிந்து சென்ற வரலாறு உண்டு. தற்போது கூட்டணி இல்லை என்பது தற்காலிக சூழல். எப்போதும் இல்லை என்று சொல்லவில்லை.”

உடன் இருந்தால் அவர்களுடன், இல்லாவிட்டால் அவர்கள் இல்லாமல், எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து களத்தில் நிற்போம். ஒரு நாளில் ஏற்பட்ட மனசங்கடம் குறித்து கம்யூனிஸ்ட் தோழர்களிடமே கேட்க வேண்டும். இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக கவலைப்படாது. தனித்து நின்றாலும் திமுகவுக்கு தனிப்பெரும் பலம் உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com