

மதுரை,
தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அதிமுக பிரமுகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா நேற்று முன் தினம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க ரூ. 30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் கூறினார். மேலும், மதுரையை சேர்ந்த மூத்த அதிமுக நிர்வாகி தன்னிடம் பேசம் பேசியதாகவும் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 30 கோடி பேரம் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக மதுரை மாநகராட்சி முன்னாள் மேயரும், அதிமுக பிரமுகருமான மன்னனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் மன்னனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.