வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

Also Read
கொருக்குப்பேட்டையில் விரைவில் புதிய பாலம் திறப்பு: அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
கோப்புப்படம்

ஏற்கனவே, தனது திறனற்ற நிர்வாகத்தால் முறையான வசதிகளின்றியும், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாமலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலும் சீரழிந்து வரும் ஊரக நிர்வாகத்தை மேலும் சிதைக்கும் வண்ணம், ஊராட்சி செயலாளர்கள் நலனையும் திமுக அரசு உதறியெறிவது நியாயமா?

Also Read
தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
கோப்புப்படம்

தேர்தல் நெருங்கியதும் ஏனோதானோவென அவசரகதியில் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து, பெருமை பீற்றிக் கொள்வதில் காட்டிய அக்கறையில் சிறு துளியேனும் அதனைச் செயல்படுத்துவதிலும், அனைத்துத்தரப்பட்ட ஊழியர்களை இணைப்பதிலும் அக்கறை காட்டாத திமுக அரசை, இனி என்றும் அரசு ஊழியர்கள் மன்னிக்க மாட்டார்கள்! போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக அரசுக்குத் தேர்தலில் ஏமாற்றத்தைப் பரிசளிப்பர்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
பி.எட், எம்.எட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் தவிப்பு
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com