தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது: ஜி.கே.வாசன்

தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது: ஜி.கே.வாசன்
Published on

நாமக்கல்,

நாமக்கல்லில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமாகா வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியோடு வியூகத்தின் அடிப்படையிலான பணிகளை தொடங்கியுள்ளோம். வரும் ஏப்ரல் மாதம் முதல் மண்டல ரீதியாக மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் திமுக அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத அரசாக செயலற்ற அரசாக நடைபெற்று வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. 2026 சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு, புதிது புதிதாக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசோடு தமிழக அரசு மோதல் போக்கை கடைபிடிக்கிறது. ஆளும் திமுக மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். திமுகவுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதுதான் உண்மை நிலை. புதிய தேசிய கல்விக்கொள்கை பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைப்பட்டி மத்திய அரசு உவாக்கியுள்ளது. இதை திமுக அரசு ஏற்க மறுக்கிறது.

தாய் மொழியை படித்துக் கொண்டு, தொடர்பு மொழி ஆங்கிலம் இருந்தபோதும், மூன்றாவதாக ஒரு மொழியை அவரவர் விருப்பப்படி கற்றுக் கொள்ளலாம் என்று தான் தேசியக் கல்விக் கொள்கை கூறுகிறது. இதை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com